போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான டிப்பர் வாகனத்திற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் 14 நாட்கள் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி தனது மனைவியின் பெயரில் குறித்த வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, குறித்த வாகனத்தை விற்பனை செய்தல், உரிமையை மாற்றுதல் அல்லது வேறு வழிகளில் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில், 2026 நவம்பர் 13ஆம் திகதி முதல் முடக்க உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றவியல் வலையமைப்புடன் தொடர்புடைய சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.










