திருகோணமலை-அபேயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவன் ஒருவரால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை பொலிஸார் மற்றும் கல்வித் திணைக்களம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், இன்று வெள்ளிக்கிழமை குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










