சுவிட்சர்லாந்தில் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்றுள்ளார்.
நிட்வால்டன் மாகாணத்தில், வசிக்கும் 80 வயதுக் கணவரே மனைவியை இவ்வாறு சுட்டு கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த கணவன் தெரிவிக்கையில்,
தனது மனைவிக்கு கொடுத்த பீட்சாவை தான் சாப்பிடாததால், தன் மனைவிக்கு கோபம் வந்ததாகவும், தன்னை அவமதிக்கும் விதத்தில் அவர் பேசியதாகவும் இதனால் ஆத்திரமடைந்து தன் துப்பாக்கியால் மனைவியை சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் அற்ககோல் கலந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.