புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரை பகுதியில் படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்று கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கற்பிட்டி பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 189 கிலோ கிராம் பீடி இலைகள் 6 பொதிகள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்