பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும், பிரமிட் நிதி நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரமிட் நிதி நிறுவனமொன்றை நடத்துதல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், அதற்கு நிதியளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 59 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










