பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்

இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் தமது 69ஆவது வயதில் நேற்று புதன் கிழமை இரவு காலமானார்.

அவர் 6,000 இற்கும் அதிகமான மேடை நிகழ்வுகளில் பாடியுள்ளதுடன் 35 வருடங்களுக்கு அதிகமான காலம் இசைத் துறையில் பயணித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரைத்துறையில் அவர் அறிமுகமானார்.

இந்த நிலையில் பாடகி உமா ரமணின் இறுதிக் கிரியை இன்று வியாழக்கிழமை மாலை சென்னை அடையாரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்