மட்டக்களப்பு மில்கோ பால் சேகரிப்பு நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்து, பால் பண்ணையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலைய பால் பண்ணையாளர்கள் அங்குள்ள பால் சேகரிப்பு நிலையத்தில் நின்றும் பால் கொள்கலன்கலுடன் அருகில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடியும் கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு பாலை வழங்கி கொண்டு வருகிறோம் , அதில் எமக்கு இடர்பாடுகளும் இல்லை .
எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய கொடுப்பனவு வழங்குகிறது. மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல் செலவு, மரணச் செலவு, திருமணச்செலவு, உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை நல்கி வருகின்றனர்.
எனவே இவ்வாறான நிறுவனத்தை இந்திய கம்பனிக்கு விற்பனை செய்வதை நாம் முற்றாக எதிர்கிறோம் எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்தா விட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும், என பால் பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதே போன்று மற்றுமொரு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மண்டூர் கணேசபுர பால் சேகரிப்பு நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்