பாதாள உலகத்தை சேர்ந்தவர் போல் நடித்து 15 இலட்சம் ரூபா கப்பம் கோரி அதிலிருந்து 5 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மினுவாங்கொடை மா போதல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது
மினுவாங்கொடை, மா போதல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பாதாள உலகத்தை சேர்ந்தவர் என்ற பெயரில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, 15 இலட்சம் கப்பம் கோரியதாக மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்க்கமையவே குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்