தனமல்வில பிரதேசத்தில் 22 பாடசாலை மாணவர்களினால் 16 வயது சிறுமியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை பொலிஸாருக்கு தெரிவிக்காமல் மறைத்தமை உள்ளிட்ட காரணங்களால் சிறுமி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர், ஆண் ஆசிரியர் மற்றும் இரண்டு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 22 பாடசாலை மாணவர்களில் 17 பேரை தனமல்வில பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்