அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த தாமஸ் மெக்மேகின் மற்றும் நான்சி கம்பேல். பாடசாலை பருவத்தில் ஒன்றாக படித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு இருந்துள்ளது. ஆனால், இருவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளார்கள்.
பாடசாலை கல்வி முடித்ததும் இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு கல்லூரி முடித்து திருமணம் என இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்துள்ளனர். ஆனாலும் இளம் வயதில் ஏற்பட்ட அந்த காதல் மனதிற்குள் அப்படியே இருந்துள்ளது.
பல வருடங்கள் கழித்து 50 ஆவது ஆண்டில் மீண்டும் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு பிறகு மேக்மேகினும் நான்சி கம்பெல்லும் சந்தித்து இருக்கிறார்கள். அப்போது இருவரும் பள்ளி பருவ காலத்தை பற்றி பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளனர். இருவருக்குமே தனித்தனியே குடும்பம் இருந்தமையினால் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிறகு வழக்கம் போல் நிகழ்ச்சி முடிந்து பிரியா விடை கொடுத்து சென்றுவிட்டனர்.
10 ஆண்டுகள் கழித்து மீண்டும் 60 ஆவது ரியூனியன் நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள். இப்போது இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததால் இருவருக்குமே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால் ரியூனியன் நிகழ்ச்சியில் இதைப்பற்றி சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் மெக்மேகின் தனது காதலை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறார்.
இதற்காக தம்பா விமான நிலையத்திற்கு கம்பெல்லை வரவழைத்த மெக்மேகின் சர்பிரஸ் கொடுக்கும் விதமாக தனது காதலை பிரபோஸ் செய்தார். இளம் காதல் ஜோடிகள் போல தனது காதலை மெக்மேகின் வெளிப்படுத்தியது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதல் மறைந்து போகாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்று பாரட்டி வருகின்றனர்.