-பதுளை நிருபர்-
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுபவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் வேலைக்கு செல்பவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
