நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தரமற்ற நிலக்கரியைப் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
“குறைந்த தரத்திலான நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நிலையத்தின் திறன் குறைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தரத்தில் இரண்டு முறை சந்தேகம் ஏற்பட்டால், நடைமுறைகளின்படி ஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் “தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை நிலையத்தின் அதிகாரிகளும் ஊழியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மின் உற்பத்தித் திறன் மேலும் குறைந்தால், இரவு நேர மின் தேவையினைப் பூர்த்தி செய்ய அதிக செலவு கொண்ட வெப்ப மின்சாரத்தை (Thermal Power) நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.