குருநாகல் பகுதியில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வைப்பாளர்களிடம் 1,100 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதுடைய சந்தேக நபர், மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர், பிரமிட் திட்டம் மூலம் மக்களிடம் பணத்தை மோசடி செய்து ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரை அழைத்து செல்வதற்காக விமான நிலையத்திற்கு பிரவேசித்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்