ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளை புதன் கிழமையுடன் நிறைவடையவுள்ளன.
கிராண்ட்பாஸ், மருதானை, நுகேகொட, பிலியந்தலை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் நாளை இறுதி பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதனால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.