அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நாட்டின் வர்த்தக வங்கிகளில் இன்று வெள்ளிக்கிழமை பெரும்பாலும் மாற்றமின்றி நிலவுகிறது.
நேற்று வியாழக்கிழமை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 முதல் 337 ரூபாய் வரையான மட்டத்தில் காணப்படுகிறது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 337.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.25 ரூபாயிலிருந்து 328.30 ரூபாயாகவும், விற்பனை விலை 337.25 ரூபாயிலிருந்து 337.30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 328.70 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.85 ரூபாயிலிருந்து 336.65 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 326.82 ரூபாய் மற்றும் 336.75 ரூபாய் என மாற்றமின்றிப் பதிவாகியுள்ளன.
அதேபோன்று, சம்பத் வங்கியிலும் டொலரின் கொள்வனவு விலை 328.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.










