-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் அன்று பக்தி பூர்வமாக ஆரம்பமாகியதை தொடர்ந்து 18,19 ஆகிய தினங்களில் விஷேட, யாக, அபிஷேகங்கள் இடம்பெற்று, கும்பாபிஷேகத்திற்கான ஆலயத்தில் வைத்து செய்யப்பட்ட திருக்குடம் எடுத்துவரப்பட்டு திருக்குடமுழுக்கிற்காக பிரதான கும்பநீரானது கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து எடுக்குவரும் சமய நிகழ்வு இன்று சனிக்கிழமை பக்திபூர்வமாக எடுத்துவரப்பட்டது.
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்த மோத்தம த்ரயத்திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று காலை 09.38 முதல் 11.20 மணிமுதல் 33 குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நிகழவுள்ளது.


