கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸல்லாவைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கார் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால், சாலையோரம் இருந்த கற்குவியலில் கார் மோதி வீதியின் குறுக்கே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குருநாகல் பகுதியில் இருந்து குருவிட, பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றிற்கு தம்பதியர் காரில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வாகனத்தில் பயணம் செய்த இருவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்