-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை மதியம் 01.10 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.
நெல்லியடி பகுதிகயில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிக்கு பெற்றோல் நிரப்பிவிட்டு சென்றுகொண்டிருந்த போதே யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது.
முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிரப்பு கலன் ஊடான ஒழுக்கினால் தீடிரென தீப்பற்றி இருக்கலாம்.என தெரிய வருகின்றது.
இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிளையில் உயிர்தப்பியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை நெல்லியடி பொஸிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்