சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஹராரே சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணியின் சார்பில் சிக்கந்தர் ராசா 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 153 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கைக் கடந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் யசஸ்வி ஜெய்ஸ்வால் 93 ஓட்டங்களையும் அணித்தலைவர் சுப்மன் கில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 3-1 எனும் அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்