எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 519 முறைப்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்றைய தினம் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெரும்பாலானவை தேர்தல் சட்ட மீறல் தொடர்பானவை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்