-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
விநாயகர் விரதத்தின் 20 ஆம் நாளான நேற்று இலட்சார்ச்சனை நிறைவு உற்சவம், விசேட ஹோமப் பூசைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசம்காரத்தை கண்டு களித்ததுடன், விநாயகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்