திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ஒருவரே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் வைத்து இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.