தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 21 முக்கிய நகரங்களில் 21 மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நுவரெலியாவில் நாளை காலை நடைபெறும் மே தினக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் மஹரகமையில் நடைபெறும் பிரதான மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.
இரத்தினபுரியில் நடைபெறவுள்ள மே தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்பார்.
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா களுத்துறை, மாத்தறை மற்றும் தங்காலை ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.
இதேவேளை வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்கவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள கட்சி ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த மே தினப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.