மட்டக்களப்பு கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின், வருடாந்த பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற்று வரும் திருவிழாவில், 7 ஆம் நாள் வேட்டை திருவிழாவும், எட்டாம் நாளாகிய நேற்று புதன்கிழமை சப்பரத் திருவிழாவும் நடைபெற்றது.
ஆலய தலைவர் ஆ.அருளேந்திரன் தலைமையில், பிரமோற்சவ பிரதான குரு சிவ ஸ்ரீ ஆறுமுகம் ரமேஷ் சிவாச்சாரியாரின் பங்குபற்றுதலுடன், விசேட வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று, தொடர்ந்து எம்பெருமான் எழுந்தருளி ஆலயத்தில் சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இன்று வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்று, நாளை வெள்ளிக்கிழமை காலை சித்திரை பௌர்ணமியில் தீர்த்த உற்சவம் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.