திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் சகோதரர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் சர்தாபுர விசேட அதிரடிப் படையினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 26, 28 வயதுடைய அண்ணன், தம்பி என பொலிஸார் தெரிவித்தனர்
இவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
