இந்தியாவில் திருப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பனியன் (Banian) நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பனியன் துணிகள், இயந்திரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விடுமுறையையொட்டி நேற்று பூட்டப்பட்டிருந்த பனியன் நிறுவனத்தில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்