-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறிப்பாக கட்டடத் துறைக்கான மூலப்பொருட்களின் விலைகள், வாகன வாடகை கட்டணங்கள், தொழிலாளர்களின் கூலிகள், லாரி மற்றும் டிராக்டர் வழியாகப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கி.விஜயதாசன், மாவட்ட பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட பொறியியலாளர் ஏ.கே.எம்.நபீல், துறைசார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
