-மூதூர் நிருபர் –
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் குறித்த வாகனம் இன்று திங்கட்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வாகன சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்