வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகப்பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சம்பவித்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக நீதவான் தமது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










