தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தனவந்தருமான தக்ஷினின் புதல்வியான பேடோங்டர்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து நாடாளுமன்றம் அவரை பிரதமராகத் தெரிவு செய்துள்ளது.
37 வயதான அவர் அந்த நாட்டின் இளம் பிரதமராவார்.
தாய்லாந்தில் தெரிவு செய்யப்படும் இரண்டாவது பெண் பிரதமராக அவர் கருதப்படுகிறார்.
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக யின்லுக் ஷினவத்ரா (Yingluck Shinawatra) செயற்பட்டிருந்தார்.
அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அந்த நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்