-கிண்ணியா நிருபர்-
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப் பொங்கல் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தைப் பொங்கல் நிகழ்வில் விசேட பூஜை வழிபாட்டுடன் பொங்கல் பொங்கப்பட்டது.
பூஜை வழிபாட்டினை பாரதிபுரம் முத்துமாரியம்மன் பிரதம குருக்கள் க.பரப்பிரமஜோதி நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்