-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை எதிர்வரும் எட்டாம் திகதி இடம்பெறவுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கமைய “புதிய கிராமம்- புதியநாடு”எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இவ் நடமாடும் சேவையானது 8 ஆம் திகதி அன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம் பெறவுள்ளது.
இதில் பிறப்பு,இறப்பு,திருமண பதிவுச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்காக சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை சிக்கல்களை தீர்த்தல்,காணி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெறல் என பல சேவைகளை பொது மக்கள் அன்றைய தினம் பெற்றுக் கொள்ள முடியும் .
எனவே பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்