-யாழ் நிருபர்-
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.
இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட்டின் சார்பாக திரு.பவான், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் திரு வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்