தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ராஜதுரை மற்றும் போசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
