ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் பண்டுலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனசெத பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அவரது பாதுகாவலர்களை கடுஞ் சொற்களினால் திட்டி தாக்க முற்பட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் கடந்த 15ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.