எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு பொருத்தமான நபர் தமது கட்சியிலில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், தனது தகுதியை அறிந்த ஒரு நபராக தமது வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்