கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தினை உருவாக்குதல் எனும் தொனிப் பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச சிவில் அமைப்புகள் இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து 45 நாட்களுக்கு ஒரு முறை கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி அவர்களின் ஊடாக மக்களுக்கு முறையான தெளிவூட்டல் சென்றடைவதற்கான வழிமுறைகளை கையாள்வதற்கு துறை சார்ந்த வளவாளர்களின் கருத்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக வெல்லாவெளி பிரதேசமும் உள்வாங்கப்பட்டு வெல்லாவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்திலும் இந்நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இப்பிரதேசத்தின் குறைபாடுகள் இதன் கட்டமைப்பு மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதங்கங்கள் பற்றிய தெளிவூட்டல் பற்றி ஆராயப்பட்டதுடன் அவர்களுடைய குறைபாடுகளும் கேட்டறியப்பட்டது.
இந்நிகழ்வு அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் ஏ. மதன் தலைமையில் இடம்பெற்றதுடன் திட்ட இணைப்பாளர் என். இஸ்மியா மற்றும் கள இணைப்பாளர் ப. சிரோஜன் மற்றும் நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் செல்வி. கு. சஞ்சலிதா மற்றும் கோறளைப்பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் நிதி உதவியாளர் சிவானந்தலிங்கம் உட்பட சபையின் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அ.குபேரலிங்கம் கலந்து கொண்டதுடன் 40 இற் கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.