சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தினகரன், தினமின, டெய்லி நியூஸ் மற்றும் காவேரி கலா மன்றம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த தேசிய விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி லேக் கவுஸ் (lake house Auditorium) அரங்கத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் விசேட ஆளுமை, சிறந்த கவிஞர், சிறந்த சிறுகதையாளர், சிறந்த நாவல், சிறந்த திறனாய்வாளர், சிறந்த சிறுவர் பாடலாக்கம், சூழலியல் – சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் உள்ளிட்ட 7 துறைகளில் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுகளுக்கான திறந்த விண்ணப்பம் டிசம்பர் 04 ஆம் திகதி வெளியாகிய தினகரன் பத்திரிகை ஊடாக கோரப்பட்டிருந்தது.
விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றோர் சிறந்த நடுவர்கள் குழாம் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்