சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி சந்தையில் 2100 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று தற்போது, 2200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்