-மூதூர் நிருபர்-
திருகோணமலை – கந்தளாய் சோமாவதி காட்டுப்பகுதியில் கஞ்சா செடிகளைப் பயிரிடுவதற்குத் தயாராக இருந்த பண்ணை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 35,000-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தெனிய பகுதியைச் சேர்ந்த நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கந்தளாய் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.










