-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து, நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்புப் பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் நுணாவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையிலேயே இவ்வாறு கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்