சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: இருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 42 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்