மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட பகுதியில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபரை சனிக்கிழமை கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து இரத்தினக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.