க்ளப் வசந்த எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் கைதான யுவதியை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
21 வயதுடைய குறித்த யுவதி, அத்துருகிரிய பகுதியில் வைத்து நேற்றைய தினம், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதான யுவதி இன்று கடுவலை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய, அவரை தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதவான் அனுமதியளித்துள்ளார்.
க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளுக்கு உதவியளித்த குற்றச்சாட்டில் மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்