நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 11,410 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,654 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமாரதிஸாநாயக்க 2,541வாக்குகளைப் பெற்றுள்ளார்.