119வது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று கைதிகளைப் பார்வையிடச் செல்பவர்கள் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்