உக்ரைன் மீது ரஷ்யா மூன்று நாட்களாக இரவுநேர தாக்குதல்கள் நடத்தி வருகிற நிலையில் நேற்று புதன் கிழமை இரவு உக்ரைனின் தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் மூலம் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் பலியாகியானதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கீவ் நகர மேயர் விடாலி க்லிட்ச்கோ, ‘குண்டு வீச்சிற்கு பிறகு சோலோமியான்ஸ்கி, செவ்சென்கிவ்ஸ்கி, போடில்ஸ்கி, மற்றும் டார்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் மீட்பு நடவடிக்கைக்காக அவசர உதவிக்குழுவினர் விரைந்தனர்’ என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகரின் மத்தியில் உள்ள சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.