-மூதூர் நிருபர்-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான பொறுப்புக்கூறல், ஆட்சிமுறை தொடர்பான மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு 20,21,22 ஆம் திகதிகளில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வை இன்டநியூஸ் ஏற்பாடு செய்திருந்தது.இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு மொழிகளையும் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இச் செயலமர்வில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி பொறுப்புக் கூறல் தொடர்பான கதைகளை எவ்வாறு உருவாக்குவது,சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்