-எருவில் கோடைமேடு நிருபர் சௌமியா-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உயரிய சிந்தனையில் கிழக்கிலங்கையில் வசிக்கின்ற சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர்யுவதிகளுக்கு “கிழக்கின் சுற்றுலா மையம்” இப் பயிற்சித்திட்டமானது நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று மட்டகளப்பு ஏ.பி.ஏ.எக்ஸ் கெம்பஸ் – லாங்விச் அன்ட் வெக்கேஸனல் ட்ரெய்னிங் சென்டர் (APAX CAMPUS – Language & Vocational Training Center) ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் செயற்குழுத் தலைவரும் “Eastern Tour Hub” “கிழக்கின்சுற்றுலா மையம்” இந்த கருப்பொருளை ஜனாதிபதி மட்டத்திற்கு எடுத்துச்சென்றவரும் சமூக ஆர்வளருமான மோகன் கணபதிப்பிள்ளை பங்குபற்றி இருந்தார்.
நிகழ்ச்சித்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட இளைஞர்யுவதிகள் பங்குபற்றி இருந்ததுடன் அவர்களுக்கான விரிவுரைகள் அனுபவமும் தேர்ச்சியும் மிக்க விரிவுரையாளர்களைக்
கொண்டு நடாத்தப்பட்டது.
கிழக்கின்சுற்றுலா மையத்தின் செயற்றிட்டமானது ஏ.பி.ஏ.எக்ஸ் கெம்பஸ் – லாங்விச் அன்ட் வெக்கேஸனல் ட்ரெய்னிங் சென்டரினால் இலவசமாக செயற்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி திட்டமானது கிழக்கிலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் மற்றும் அந்நியச் செலாவனியை அதிகரிக்க வழிவகுப்பதுடன் அவர்களின் தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்க செய்வதையும் தொழில் அங்கத்துவத்தை வழங்குவதையும் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
இப்பயிற்சி நெறி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதல் வழங்கப்படுவதுடன்
“கிழக்கின்சுற்றுலா மையம்” சுற்றுலா வழிகாட்டிக்கான உத்தியோகபூரவ அடையாள அட்டை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்