-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா அஹமட் லேன் வீதியைச் சேர்ந்த, மஹ்ரூப் முன்னவ்வரா (வயது 33) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் புத்தி சுவாதீனமற்றவர் எனவும், கடலில் குளிப்பதற்காக இன்று காலை கடலில் இறங்கியதால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.
சடலத்தை விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்